முக்குலத்தோர் புலிப்படை தலைரும், நடிகருமான கருணாஸ் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பேட்டியளித்தார்.
2 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் நடிகருமான கருணாஸ் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் தன்னுடைய பிறந்தநாளையொட்டி இங்கு வந்து ஆசி வாங்க வந்ததாகவும், பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் விளையாட்டுதுறையை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.