மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

70பார்த்தது
திருவாடானை அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முள்ளிமுனை கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஹனிபா என்பவருக்கு சொந்தமான படகில் இன்று அதிகாலை ஹனிபா, பால்கனி, மணி மீனவர்கள் நேற்று இரவு கடலுக்குச் சென்று வலையை விரித்தி வைத்து வந்த நிலையில் இன்று வலையை எடுக்கச் சென்றபோது வகையில் சுமார் 70 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடி வந்ததை கண்ட மீனவர்கள் தங்களது வலைக்கு சேலம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கத்தியால் வலையை அறுத்து சிக்கியிருந்த ஆமையை மீட்டு பத்திரமாக கடலில் விட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த ஆமை
பெருந்தலைக் கடலாமை என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ. மீ (35 அங்குலம்) வளரக்கூடியதும்  135 கிலோ வரை வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டதுஇந்த ஆமைகளின் ஆயுட்காலம் 47 முதல் 67 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலில் வாழக்கூடிய அரிய வகையான ஆமை வகைகள் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் கடற்கரையை நோக்கி வரும்பொழுது இவ்வாறு வளையல் சிக்குவதாகவும் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி