தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நாளை (பிப். 14) காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை பாம்பன் புதிய ரயில்வே பாலம், மண்டபம், ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை பிப். இறுதி வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.