பரமக்குடி: இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால் டெல்லியில் பாஜக வெற்றி

53பார்த்தது
டெல்லி சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாமல் போட்டியிட்டதால் பாஜக வெற்றி பெற்றுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரமக்குடியில் பேசினார். 

ஒன்றிய நிதி அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தல், பேரிடர் காலத்திற்குப் பிறகு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரை கூட உச்சரிக்காதது என தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பூர்ண சங்கீதா, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கண்டன பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் திமுக கூட்டணியின் கீழ் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் வேலை செய்கின்றனர். தமிழகத்தில் இந்த கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் விரும்புகிறார் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி