

கமுதி; முளைப்பாரி திருவிழா; கலந்து கொண்ட பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 10) காலை முதல் 500க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டு இன்று மாலை 6.30 மணியளவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. முளைப்பாரி விழாவை முன்னிட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்களோடு புறப்பட்ட 504 முளைப்பாரிகள் ஊரில் நகர்வலம் வந்து முடிவில் ஊர்க்கண்மாயில் கும்மியடித்து கரைத்தனர். இந்த ஆண்டு நல்ல நெல் விளைச்சல் இருந்ததால் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.