கமுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது

67பார்த்தது
கமுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கே. வேப்பங்குளம் விலக்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த சிங்கப்புலியாபட்டியைச் சோ்ந்த காந்தி மகன் மணிகண்டனை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி