தைப்பூச விழா கோலாகல கொண்டாட்டம். பால தண்டாயுதபாணி சுவாமிக்கு கேரளா செண்டை மேளம் , இசை வாத்தியங்களுடன் சிறுமியர் கோலாட்டம், மயிலாட்டத்துடன் 508 பால்குடம் அலகுவேல் குத்தி ஊர்வலம்: பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைந்துள்ள தண்ணீர் பந்தல் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமிக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு கேரளா செண்டை மேளம், உறுமி மேளம், தப்பாட்டம் , இசை வாத்தியங்களுடன் சிறுமியர்களின் கோலாட்டம் நடனம், மயிலாட்டம் நடனம் , கடலாடி முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலமாக ஏராளமான பக்தர்கள் சென்று பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூத்த முருக பக்தர்களுக்கு காய்கறி உணவுப்பொருட்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை சைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவில் கடலாடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.