கமுதி அருகே அபிராமம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் நடப்பாண்டு முதன் முறையாக அப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி துவங்கப்பட்டுள்ளது
இந்த அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அபிராமம் சுற்றியுள்ள ஐம்பதற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாள்தோறும் ஆன்லைனில் முன்பதிவு செய்து தங்களது வயலில் விளைந்த நெல் மூட்டைகளை சரக்கு வாகனங்களில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒரு குவிண்டால் எடை அளவிற்கு ஊக்கத் தொகையுடன் ரூ. 2, 450 வீதம் விற்பனை செய்து வருகின்றனர்
இதனால் அதிக வருவாய் வருவதாக கூறுகின்றன