முதுகுளத்தூர் - Mudukulathur

தக்கைப் பூண்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தக்கைப் பூண்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

முதுகுளத்தூர் பகுதியில் பசுந்தாள் உரத்துக்கு தக்கைப் பூண்டு உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என வேளாண்மைத் துறைற துணை இயக்குநர் அமர்லால் வலியுறுத்தினார். முதுகுளத்தூர் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறறது. இந்தப் பகுதியில் இயற்கை உரங்கள், மக்கிய தொழு உரங்களைப் பயன்படுத்த வாய்ப்பில்லாததால், மண் வளம் பாதிக்கப்படுகிறறது. மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் "முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், பயிர் சாகுபாடிக்கு முன் பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்துக்கு முன்பாக இவற்றைற நிலத்தில் அப்படியே உழுது மண் வளம் பேண மானிய விலையில் தக்கைப் பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், முத்துவிஜயபுரம் கிராமத்தில் பயிர் செய்யப்பட்ட தக்கைப் பூண்டு செடியை நிலத்தில் சுழல் கலப்பை மூலம் உழவு செய்யப்பட்டது. இந்தப் பணியை வேளாண்மைத் துறைற துணை இயக்குநர் அமர்லால் (மாநிலத் திட்டம்) வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

வீடியோஸ்