பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

56பார்த்தது
ராமநாதபுரம்
பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது கே. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் பெருநாழியிலிருந்து கமுதி நோக்கி வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் பவுனு என்பவரை கைது செய்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி