புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் மனைவி, மகன்களுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில், வழக்கம் போல் வீட்டை பூட்டி எப்பவும் வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டு தூங்கி விட்டனர். பின்னர் காலையில் பார்த்த போது வைத்த இடத்தில் சாவி இல்லை, பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகை 35 பவுன் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.