புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமை தாங்கினார். இதில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது மற்றும் புகை சூழ்ந்த இடங்களில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றுவது பற்றிய செயல் விளக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் செய்தனர்.