34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி

73பார்த்தது
34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி
பெங்களூரு: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதித்தது. இன்று(அக்.17) தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறியது. ரோஹித் 2, கோலி 0, சர்ப்ராஸ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யஷஸ்வி 13 ரன்னிலும், கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் ரன் ஏதுமின்றி அவுட்டாகினர். இந்திய அணி உணவு இடைவேளை வரை 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

தொடர்புடைய செய்தி