புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விராலிமலை போலீசார் நேற்று ஜெயமங்கலத்தில் உள்ள பெட்டிகடையில் ஆய்வு செய்த போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெட்டிகடை உரிமையாளர் ரெங்கசாமி என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலையை பறிமுதல் செய்தனர்.