புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயில் அருகே உள்ள சாலையில் நடந்து சென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மலையரசன் (96) என்பவர் மயக்கம் அடைந்து சாலை ஓரத்தில் விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மலையரசன் உயிரிழந்தார். இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.