புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று அதிகாலை 13ஆவது நாளாக லேசான மூடுபனி நிலவியது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அங்கு தற்போது பூக்கள் பயிரிட்டுள்ள நிலையில் பூக்கள் கருகும், அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் பனியும் பின்னர் வெயில் வாட்டி வருவதால் பூக்கள் கருகிப் போவதாக பூ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.