தவெக முதலாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பாஸ் இன்று (பிப்.,22) முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆண்டு விழா வரும் 26ஆம் தேதி ஈசிஆர் சாலையில் உள்ள Confluence Centre-ல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு முறையாக போலீசாரிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்திருந்த நிலையில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.