திருமயம் கனிமவள கொள்ளை தொடர்பாக அரசுக்கு புகார் அனுப்பிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் (காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்) புதுகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போடப்பட்ட மனுவின் மீது இன்று மாலை 3: 30 மணிக்கு முடிவு அறிவிப்பதாக நீதிபதி பாரதி தெரிவித்துள்ளார்.