புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் இவர் ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற ஆடு இரை தேடிச் சென்ற போது, அருகே உள்ள தண்ணீர் அற்ற 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் மீட்பு படையினர் விரைந்து வந்து ஆட்டை உயிருடன் மீட்டனர்.