புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெரு ஸ்ரீ நொண்டியப்பச்சி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பூத்தட்டு மற்றும் முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று மேளதாளங்கள் முழங்க குதிரை நடனமிட பூத்தட்டு மற்றும் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.