ஜாவா மோட்டோ நிறுவனம், 350 பைக்கின் லெகசி எடிஷனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஜாவா 350 லெகசி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் அறிமுக விலையாக முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.99 லட்சத்திற்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ.16 ஆயிரம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 22.5hp பவர் மற்றும் 28.1Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.