கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் மாஷா ஹலால் ஹோட்டலில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவு விநியோகக் கடையை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வில் உணவு தரமான முறையில்தான் உணவு வழங்கப்படுகிறது ஆய்வில் தெரிய வந்தது.