புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டைவிடுதி கிராமத்தில் தேங்காய்மஞ்சி ஏற்றி சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் திடீரென மின்கம்பியில் உரசியதில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தீயை அணைத்தனர். தீ விபத்தில் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.