கல்லாக்கோட்டை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக ஊராட்சி மன்ற செயலாளருக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் தூய்மை பணியாளர்கள் இன்று மாலை அப்பகுதிக்கு சென்று கொசு மருந்து அடித்தனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ளவும் செடி கொடிகளை அகற்றவும் கேட்டுக்கொண்டனர்.