அறந்தாங்கி: தீக்குளித்து வாலிபர் தற்கொலை
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அழியாநிலை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(30). திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. வீட்டிலேயே மெக்கானிக் கடை வைத்திருந்து இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டி நேற்றிரவு புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய நிலையில் அதே இடத்தில் பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து, அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.