புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட உடையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா. இவர் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ராஜாதோப்பு பகுதியில் மரத்தின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், உடல்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.