புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆற்றுப்படுகையில் மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அறந்தாங்கி அருகே அழியா நிலையில் வெள்ளாற்று படுகை உள்ளது. இந்த வெள்ளாற்று படுகையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அதிகமான மணலை திருடி சென்றுள்ளனர். இது பற்றி பொதுமக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி ஆர்டிஓ சிவக்குமார், தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் விசாரணை நடத்தினர். அழியாநிலை விஏஓ தண்டாயுதபாணி அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மணல் கடத் தியவர்களை தேடி வருகின்றனர்.