புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் குழாய் செல்கின்றது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதால் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த குடிதண்ணீர் பைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.