ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீயத்தூர் ஊராட்சி வேலிமங்கலம் மக்கள் சாலை வசதி கேட்டும், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று விசிக கட்சியினருடன் இணைந்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை அறிந்த ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி வைத்தார்.