புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காடு ஊராட்சியில் நேற்று (பிப்.7) அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அறந்தாங்கி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன் மற்றும் பெருங்காடு கிளைக் கழகச் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதில் கிராம பொது மக்களின் பலர் உடன் இருந்தனர்.