புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஊர்வணி ஊராட்சிக்குட்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே புள்ளி மானை தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திர மோகன் மற்றும் அறந்தாங்கி வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.