புதுக்கோட்டை அருகே திருவரங்குளம், வேப்பன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக எஸ்பியின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று வெவ்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.