புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.