கோட்டைப்பட்டி: சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க கோரிக்கை!

58பார்த்தது
கோட்டைப்பட்டினத்திலிருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலையில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சாலையின் ஓரம் மண் அரிக்கப்பட்டு ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உள்ளன. இரவு நேரத்தில் பைக்கில் வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது பள்ளம் தெரியாமல் அதனுள் விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி