ஆதிபட்டினம், டிச. 30, 2024 அன்று கடலில் வலையில் இறந்த நிலையில் ஒருவர் சிக்கினார். அவர் அணிந்திருந்த சட்டையில் கோட்டைபட்டினத்தில், டைலர் கடை பெயர் இருந்தது. அவர், புதுக்குடி மாதவன் என அவரது மனைவி காளீஸ்வரி அடையாளம் தெரிவித்தார். தீவிர விசாரணையில் இறந்தவரின் நண்பர்கள் காளீஸ்வரன் (24), நவீனேஷ் (18) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. மணமேல்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.