புதுக்கோட்டை மாவட்டம் தோப்புவயல் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சமூக விரோதிகளால் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்கள் உடைத்து உள்ளே போட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் போன்றவற்றை உள்ளே போட்டுச் செல்வதால் பொதுமக்கள் இந்த பயணியர் நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலை இருக்கின்றது. ஊராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.