புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ராம் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு முறையில் கல்வி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி பயிற்சி அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஆசிரியர்கள் ஸ்டாலின், சரஸ்வதி ஆகியோர் பயிற்சியை மேற்கொண்டனர்.