புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரத்தில் சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் விவசாய நிலங்களில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையினால் நல்ல விளைச்சல் தந்திருக்கும் நெற்பயிர்களை தற்போது அறுவடை பருவம் வந்ததை அடுத்து விவசாயிகள் அறுவடைப்பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இயந்திரங்களைக் கொண்டு விறுவிறுப்பாக அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.