புதுக்கோட்டை, மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேரை பிடித்து கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த இன்னாசி (வயது 44), சுப்ரமணியன் (62), முருகன் (59), மாடசாமி (52), முனுசாமி (45) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 1,050-ஐ பறிமுதல் செய்தனர்.