ஆலங்குடி: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி: மைலன்கோன்பட்டி சுரத்தான் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (47). இவரது மனைவி சத்யா. சம்பவத் தன்று காலையிலேயே திருப்பதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி சத்யா கண்டித்தார். இதனால் மனமுடைந்த திருப்பதி விஷம் குடித்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.