புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற குருபூஜை விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற நிலையில், முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற வாகனங்களுக்கு மட்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆன்லைனில் அபராதம் விதித்ததாகக் கூறி முன்னாள் அமைச்சரின் மகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலங்குடி - பேராவூரணி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.