புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு செல்கின்றன. இந்த மழையினால் தற்போது கார்த்திகை பட்டத்திற்கு விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த மழைநீர் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.