புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, செங்கமேடு மகாராஜா சமுத்திர கட்டாறு அருகே 45 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற ரகுநாதபுரம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விஏஓ பழனிவேல் அளித்த புகாரின் பேரில் ரகுநாதபுரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.