புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள காமராஜர் சிலை பகுதியில் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் வாகனங்களை செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.