வாசனைக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும். சிறுநீரக கற்களைப் போக்க உதவும் பிரியாணி இலை உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.