புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, பிராமணவயல் காட்டுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் ஆலங்குடி அடுத்த ஆவணம் கைகாட்டி அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில் விற்பனை செய்தார். இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.