ஆலங்குடி: அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கும்மாங்குளம் நம்பம்பட்டியில் மளிகை கடை நடத்தி வரும் செந்தில்நாதன் (53) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்ப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துறையினர் ஹான்ஸ் (82) பாக்கெட், எடை 1. 640 கிலோகிராம் கைப்பற்றினர். இது தொடர்பாக அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.