புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்து விடுதி பகுதியை சேர்ந்த உதயகுமார் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை என்று ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் வாகனத்தை திருடியது, அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முருகானந்தம், பிரித்திவிராஜ் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.