புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் நாலு ரோடு, திருவரங்குளம் மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் இன்று (அக். 24) மதியம் கன மழை பெய்தது. இந்த மழையினால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் திருவரங்குளம், வம்பன் நாலு ரோடு பகுதிகளில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.