புதுச்சேரி அரசு சார்பாக காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்டத் துணை ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.